பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தில் சிக்கி பெண் தொழில் அதிபர் காயம்! சென்னையில் பயங்கரம்

அதிசய உலகம்

next........

மேலும்..

சென்னை சின்மயா நகர் வைஷ்ணவி நகரை சேர்ந்தவர் ராகேஷா. இவரது மகன் ரிச்சாஷா (25). இளம் தொழில் அதிபர் நேற்று இவர்கள் குடும்பத்துடன் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இ.வி.பி. தீம்பார்க் எனப்படும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் பொழுது போக்கு பூங்காவில் பல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

பின்னர் கப் அண்ட் சாசர் ராட்டினத்தில் அவர்கள் ஏறினார்கள். கப் அண்ட் சாசர் ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ரிச்சாஷா திடீரென்று ராட்டினத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். இடுப்பு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறித்துடித்தார்.

உடனடியாக ராட்டினம் நிறுத்தப்பட்டது. ரிச்சாஷாவை ஆம்புலன் சில் ஏற்றி சென்னை வடபழனியில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரிச்சாஷா நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பொழுது போக்கு பூங்கா நிர்வாகத்தினரின் அஜாக்கிரதையால் தான் காயம் அடைந்ததாக புகா ரில் கூறி இருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரிச்சாஷா காயம் அடைந்தது தொடர்பாக அவரது தொழில் பங்குதாரர் சென்ன கேசவலு கூறியதாவது:-

கப் அண்ட் சாசர் என்னும் ராட்டினத்தில் ரிச்சாஷா சுற்றிக் கொண்டிருந்த போது அதில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு சங்கிலி திடீரென்று உடைந்தது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. பொழுது போக்கு பூங்காவில் முதலுதவி சிகிச்சை அளிக்கக் கூட டாக்டர் யாரும் இல்லை.

பூந்தமல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தது. அதில் ஏற்றி ரிச்சா ஷாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். சம்பவம் நடந்த இடத்தில் ஊழியர்களும், தீம்பார்க் நிர்வாகத்தினரும் எந்த உதவியும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக பொழுது போக்கு பூங்கா மானேஜர் ஹரிஹரசுதன் கூறியதாவது:-

ராட்டினத்தில் பாதுகாப்பு சங்கிலி உடையவில்லை. ரிச்சாஷா பயத்தின் காரணமாக ராட்டினம் சுற்றும் போது கீழே இறங்க முயன்றார். அப்போது கீழே தூக்கி வீசப்பட்டார். அவர் கீழே விழுந்ததும் உடனே ராட்டினத்தை நிறுத்தினோம். அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தோம் ஆனால் அவர் காரில் ஏற மறுத்து விட்டார்.

ஆம்புலன்சில் தான் செல்வேன் என்றார். எங்கள் தீம்பார்க்கில் முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டரும், நர்சும் உள்ளனர். டாக்டர் பூந்தமல்லியில் வேறொரு வேலையில் இருந்ததால் அவரை வரவழைக்க முடிய வில்லை. நர்சு விடுமுறையில் இருந்தார். ரிச்சாஷாவின் மருத்துவ செலவு முழுவதையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்