தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் புலி ஆதரவாளர்கள் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு செயற்படுவது தவறு!

அதிசய உலகம்

next........

மேலும்..

தமிழ்நாட்டில் இலங்கை பிரஜைகள் மீது தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களுடன் உறவை பலப்படுத்த வேண்டுமென இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டை மறந்துவிட்டு டில்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பலப்படுத்திய காரணமாகவே இப்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற எண்ணத்தில் இலங்கை அரசாங்கம் செயல்படுவது தவறு என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் காரணமாகவே அப்பாவி இலங்கைப் பிரஜைகள் வெளிநாடொன்றில் தாக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என லக்ஷ்மன் கிரியல்ல குற்றம்சாட்டினார்.

ஆனாலும் இலங்கை பிரஜைகள் தாக்குதலுக்குள்ளாவதை ஐ.தே.க. வன்மையாக கண்டித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்