சாலையை கடக்கும் போது மொபைல்போனில் பேசுவது..ஆபத்து..!!!

அதிசய உலகம்

next........

மேலும்..

மொபைல்போன் பேசிக்கொண்டே சாலையை கடக்கும் பாதசாரிகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

மொபைல்போன் இல்லாத கைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. மொபைல்போனில் பேசுவது தவிர்க்க முடியாது என்றாலும் கூட அது சாலை வரை வந்து, பலரின் உயிருக்கு உலை வைக்கும் விஷயமாக மாறிவிட்டது.

மொபைல்போனில் பேசியபடி சாலையை கடக்கும் பாதசாரிகளால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாகனங்கள் வருவதை கூட அவர்களால் உணர முடியாத அளவுக்கு செல்கின்றனர். ஒன்றன் ஒன்றாக வாகனங்கள் செல்லும்போது இதுபோன்று எதிர்பாராத விதமாக குறுக்கே வரும் பாதசாரிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக, சிக்னல் திறந்திருக்கும்போதே பலர் மொபைல்போனில் பேசியபடி அலட்சியமாக கடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, சாலையை கடக்கும்போது மட்டுமாவது மொபைல்போனில் பேசுவதை அறவே தவிர்த்துவிடுங்கள். பாதசாரிகள் கடப்பதற்காக சாலையில் குறிக்கப்பட்டிருக்கும் இடங்களில் மட்டுமே சாலையை கடப்பதும் அவசியம்.

வாகன ஓட்டிகளும் மொபைல்போனில் பேசுவதை தவிர்த்து சாலையில் கவனம் வைத்து ஓட்டுங்கள். வாகன ஓட்டிகள் மொபைல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது போன்று, சாலையை கடக்கும்போது பாதசாரிகளும் மொபைல்போன் பயன்படுத்த தடைவிதித்தால் நலமே. உங்களது கருத்தையும் தெரிவியுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்