அணுமின் நிலையத்தை மூட தீர்மானித்து அறிக்கை விடுத்தது க்யூபெக் மாகாணத்தின் புதிய அரசு

அதிசய உலகம்

next........

மேலும்..

மாகாணத்தின் அணுமின் நிலையத்தை புதிப்பிக்கப்போவதில்லை என்றும் மாறாக அந்த அணுமின் நிலையத்தை மூடப்போவதாகவும் Quebec மாகாணத்தின் புதிய PQ அரசு அறிவித்துள்ளது.

அந்தத்தகவலை உறுதிப்படுத்தி Pauline Marois தலைமையிலான புதிய அரசிற்கான மக்கள் தொடர்பாளர் அறிக்கை விடுத்துள்ளார். அணுமின் நிலையத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை படமாக்கியதற்கு அடுத்த நாள் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ப்ரீமியர் அணுமின் நிலையத்தை புதுப்பிக்கும் முயற்சியில் 2008ஆம் ஆண்டு இறங்கினார். ஆனால் ஜப்பான் நாட்டில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தை தொடர்ந்து பணிகள் ஸ்தம்பித்தன.

2009ஆம் ஆண்டிலிருந்து அணுமின் நிலையத்தை இழுத்து மூடுவதற்கான முயற்சிகளில் PQ கட்சி இறங்கியது.

1983ஆம் ஆண்டிலிருந்து அணுமின் நிலையம் செயல்பாட்டில் உள்ளது. புதுப்பிக்கப்பட்டால் செயல்பாடு இன்னும் 30 வருடங்களுக்கு தொடரும்.
ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த அணுமின் சக்தி தேவையா என்பதே நிலவிவரும் கேள்வியாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்