புதுக்குடியிருப்பு வேணாவிலில் நாளை மறுதினம் மீள் குடியமர்வு!

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியைச் சேர்ந்த மக்கள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெயர்ந்து செட்டி குளம் மனிக்பாம் ஆனந்த குமார சாமி, கதிர்காமர் ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் சுமார் 202 குடும்பங்கள் இவ்வாறு அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த் தப்படவுள்ளன.

இது தொடர்பாக முல்லைத்தீவு செயலகத் தினர் அறிவித்திருப்பதாவது:

கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் இந்தப் பகுதிக்கான மீளக்குடியமர்வு நடவடிக்கை காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

தற்போது இந்தப் பகுதியிலுள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அந்தப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனம் அதற்குரிய சான்றிதழை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைத்துள்ளது.

இதனையடுத்து நாளை திங்கட்கிழமை வேணாவில் பகுதி மக்களை மீளக் குடியர்த்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மனிக்பாம் நலன்புரி நிலையங்களிலிருந்து அவர்களுடைய உடமைகளுடன் அழைத்து வரப்படும் மக்கள் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் தங்கவைக் கப்பட்டு மீளக்குடியமர்வுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் அங்கு வைத்து மீளக்குடிய மரவுள்ள மக்களுக்கான மீளக்குடியமர்வுக் கொடுப்ப னவுகள் மற்றும் நிவார ணப் பொருள்கள் என்பன வழங் கப்படவுள்ளன.

தொடர்ந்து மறுநாள் அவர்கள் சொந்த இடங்களில் சென்று குடியமர அனுமதிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள கேப்பாப்புலவு மக்களை கோம்பாவில் திம்பிலி இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன என்றும் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் மனிக்பாம் பகுதியில் தங்கியுள்ள மந்துவில் பகுதி மக்களையும் மீளக்குடிய மர்த்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் அத்துடன் மீள் குடியமர்வுப் பணிகள் நிறைவு பெற்று முகாம் நலன்புரி நிலையங்கள் மூடப்படவுள்ளன என்றும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்