பிரபல ஜெர்மன் விளையாட்டு அணிகலன் நிறுவனமான அடிடாஸின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம்

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இடதுகை பேட்ஸ்மேனாக இவர், இந்திய அணியின் தேவையை அறிந்து ஆடும் தன்மை கொண்டவர்.

இந்த நிலையில் இவர், ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டு அணிகலன், ஷூக்கள் மற்றும் உபகரண தயாரிப்பாளரான அடிடாஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடிடாஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தக இயக்குனர் துஷர் கோகுல்தாஸ் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

சுரேஷ் ரெய்னா தனது சிறப்பாக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் இந்திய அணிக்கு பக்கபலமாக உள்ளார். எனவே சுரேஷ் ரெய்னா போன்ற ஒரு திறமையான விளையாட்டு வீரருக்கு ஆதரவு அளிப்பதில் பெருமைப்படுகிறோம் என்றார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது,

எனது கிரிக்கெட் வாழ்க்கையில், அடிடாஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் உதவியாக இருந்து வருகிறது. அடிடாஸ் நிறுவனத்தின் நவீன தயாரிப்புகள் எனக்கு கிரிக்கெட் ஆடுகளத்தில் மட்டுமின்றி, வெளியேயும் பயன்படுகிறது என்றார்.

இதுவரை சுரேஷ் ரெய்னா அடிடாஸ் நிறுவனத்தின் ஷூக்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளாராம். எனவே அவரை விளம்பர தூதராக நியமித்து, தங்களின் வியாபாரத்தை அதிகரிக்க அடிடாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் போன்ற அணிகளின் சீருடை விநியோகத்தை, அடிடாஸ் நிறுவனம் தான் செய்து வருகிறது. மேலும் வேயன் பிராவோ, போல்லார்டு, மலிங்கா, சச்சின் ஆகியோர் ஏற்கனவே அடிடாஸ் நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி வரும் நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்