கடத்தல் மற்றும் காணாமல் போதல்களை உடனடியாக நிறுத்தக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்! (பட இணைப்பு)

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன லலீத் குகனின் விடுதலையை வலியுறுத்தியும் வடபுலத்தில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதலை உடனடியாக நிறுத்துமாறு கோரி யாழில் ஆர்பாட்டம் ஒன்று இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

யாழ்.பஸ் நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கடத்தல் கொலைகளை உடன் நிறுத்துமாறு கோரியும், லலித் குகனை விடுதலை செய்யுமாறு கோரி சுலோகங்கள் தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தினை முன்னணி சோசலிசக் கட்சி மற்றும் கடத்தல் மற்றும் கைதுகளுக்கு எதிரான ஒன்றினைந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்பாட்டத்தில் பொலிசாருக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கிடையில் கருத்து மோதல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்