மோட்டோரோலா நிறுவனம் புதிய ரேசர் ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது

அதிசய உலகம்

next........

மேலும்..

புதிய ரேசர் ஐ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது மோட்டோரோலா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். தற்சமயம் தான் ரேசர் வரிசை கொண்ட ஸ்மார்ட்போனைகளை அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம்.

ரேசர் ஐ ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்கும் வகையில் இன்டெல் ஏட்டம் சிங்கிள் கோர் பிராசஸரை வழங்கும். இந்த பிராசஸர் 2 ஜிகாஹெரட்ஸ் வேகத்தில் இயங்கும். இதனால் சிறந்த வேகத்தில் இந்த ஸ்மார்ட்போன் செயல்பட முடியும்.

4.3 இஞ்ச் திரை வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும். ஜெல்லி பீன் ஆப்பேரட்டிங் சிஸ்டம் அப்டேஷனையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெறலாம்.

ரேசர் ஐ ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை வழங்கும். இதில் அழகான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும்.

மேலும் இதில் 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும்.

இந்த ஸ்மார்ட்போன் வைபை, ப்ளூடூத், என்எப்சி போன்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். இதன் 2,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் நீடித்து உழைக்கும் பேட்டரியினை பயன்படுத்த முடியும்.

ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரெஞ்சு ஆகிய நாடுகளில் இந்த ரேசர் ஐ ஸ்மார்ட்போன் கறுப்பு நிறத்தில் அறிமுகமாகும். அதன் பிறகு வருகிற அக்டோபர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை நிற வெர்ஷனிலும் அறிமுகமாகும். இதன் விலை விவரம் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்