மஹிந்த, பஸில், கோத்தபாய ஆகியோரின் ஒன்றிணைந்த பலத்தை அழிக்காது போனால்…!

அதிசய உலகம்

next........

மேலும்..

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரின் ஒன்றிணைந்த பலத்தை அழிக்காது போனால், எதிர்காலத்தில் பிரபாகரனினால் ஏற்பட்ட அழிவுகளை விட அதிகமான அழிவுகள் நாட்டில் ஏற்படும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா எச்சரித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

இன்று நாட்டில் பிரதானமான பிரச்சினையாக இருப்பது மூன்று அதிகாரங்கள் நாட்டில் செயற்படுவதுதான்.

ஜனாதிபதி இதில் உச்சத்தில் இருக்கின்றார். இரண்டாம நபர் பசில் ராஜபக்ஸ, மூன்றாவது நபர் கோத்தபாய ராஜபக்ஸ, இந்த மூன்று சக்திகளும் இன்றி நாட்டில் எதுவும் நடக்காது.

இந்த மூன்று சக்திகளின் அடிமைகளாகவே அமைச்சர்கள் இருக்கின்றனர். அமைச்சர்கள் கோப்புகளை தூக்கி செல்பவர்களாகவே இருக்கின்றனர்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மூன்று சக்திகளை அழிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது போனால் இந்த பிரச்சினையானது தமிழ், முஸ்லிம் பிரச்சினைகளை விட பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். அன்று பிரபாகரன் பெரும் பிரச்சினையாக இருந்தார்.

தற்போது இந்த மூன்று சக்திகள் நாட்டுக்கு பிர்சசினையாக மாறியுள்ளன.

இவர்களை அடக்குவது பிரபாகரனை அடக்கியது போன்று இலகுவான காரியமல்ல.

இவர்கள் இந்த அதிகாரத்தை மக்களின் வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்கின்றனர். அச்சுறுத்தி அல்லது ஏதாவது ஒன்றை கொடுத்து இவர்கள் அதிகாரத்தை பெற்று கொள்கின்றனர்.

இந்த மூன்று சக்திகளிடம் இருந்து தப்பிக்க வேண்டுமாயின் ஜனநாயக ரீதியாக நாம் ஒன்றிணைய வேண்டும்.

அப்படி இல்லையெனில் எதிர்கால சந்ததியினர் நியாயமாக வாழும் சூழல் இல்லாமல் போகும் எனவும் முன்னாள் நீதியரசர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்