யாழ். தீவகக் கடற்பரப்பில் மூன்று நாட்களில் மீட்க்கப்பட்ட நான்கு சடலங்கள்! அதிர்ச்சியில் மக்கள்

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் நான்கு இனந்தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். வேலணை சாட்டிக் கடற்கரையில் இனம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு நேற்று முன்தினம் திங்கட்கிழமை புங்குடுதீவுப் பகுதியில் இனந்தெரியாத ஆண்கள் இரு வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவில் மீட்கப்பட்டுள்ள ஒரு சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் மற்றையது கால் துண்டிக்கப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இனந்தெரியாத நான்கு ஆண்களின் சடலங்களும் பிரேத பரிேசாதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இனம் தெரியாத நிலையில் மீட்க்கப்படும் சடலங்களால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்