உள்ளாடை மட்டும் அணிந்து இளம்பெண்கள் நூதன போராட்டம்???

அதிசய உலகம்

next........

மேலும்..


லண்டனில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை போலீசார் சரியாக விசாரிப்பதில்லை என குற்றம் சாட்டி உள்ளாடை மட்டும் அணிந்து இளம்பெண்கள் நூதன போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இங்கிலாந்தில் பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளான ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். 100 பலாத்காரம் நடந்தால் 7 பேர் மட்டுமே தண்டனை பெறுகிறார்கள். மற்றவர்கள் தப்பித்து விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போலீசார் சரியாக விசாரிப்பதில்லை. மாறாக பெண்கள் அணியும் உடைகளையே குறை கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர் களை மனரீதியாக சித்ரவதை செய்து வழக்கை முடித்து விடுகின்றனர். நாங்கள் பலாத்கார பயத்திலேயே வாழ முடியாது. இதுபோன்ற வழக்குகளில் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுப்பதை பிரதமர் டேவிட் கேமரூன் உறுதி செய்ய வேண்டும். நாளை மறுதினம் ஆயிரக்கணக்கான பெண்கள் இதேபோல திரண்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு பெண்கள் கூறினர்.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்