கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண் வீரர்

அதிசய உலகம்

next........

மேலும்..


கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த இங்கிலாந்து ராணுவ பெண் வீராங்கனை, ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தலிபான், அல் கய்தா தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த படையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட பல நாட்டு வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த பெண் வீரர் ஒருவர், ஆப்கனில் போரிடும் வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கேம்ப் பேஸ்டியன் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிறைமாத கர்ப்பிணியாக அவர் இருப்பதை அறிந்து பிரசவ வலி என்று கூறினர். உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கருவுற்றுள்ள பெண் வீரர்களை பணியில் ஈடுபடுத்துவதில்லை. ஆனால், அவர் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு தெரியாது. உண்மையில் அவருக்கே தான் கர்ப்பமாக இருப்பது தெரியவில்லை. பெண் வீரரும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர். அவர்களை இங்கிலாந்துக்கு பத்திரமாக அழைத்து வர சிறப்பு விமானம் அனுப்பப்படும் என்றனர். விசாரணையில், 6 மாத கர்ப்பமாக இருக்கும் போது பெண் வீரரை ஆப்கன் பணிக்கு அனுப்பியது தெரிய வந்தது.
For more NEWS updates, follow us on Twitte

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்