தமிழர்கள் அரசுக்கு வாக்களித்தன் பலன் சிங்களவர் கிழக்கு பிரதம செயலாளராக நியமனம்!

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் கருணா போன்றவர்களுக்கும் பேரினவாத கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றி பெற செய்ததன் பலனாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கின் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் கடந்த 17ஆம் திகதி நியமிக்கப்பட்டார். 13ஆவது மாகாணசபை சட்டத்தின் படி முதலமைச்சர் சத்திய பிரமாணம் செய்ததன் பின் பிரதம செயலாளரை முதலமைச்சரே நியமிக்க வேண்டும். ஆனால் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தால் குருநாகலை சேர்ந்த சிங்கள அதிகாரி ஒருவர் கிழக்கு மாகாணசபை பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது மாகாணசபை சட்டத்தை மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கள பேரினவாத கட்சி ஒன்றின் நிர்வாகத்தின் கீழ் கிழக்கு மாகாணசபை சென்றதன் பலனை இப்பொழுது தமிழ் முஸ்லீம் மக்கள் அனுபவிக்க தொடங்கியுள்ளனர். தமிழ் முஸ்லீம் கட்சிகள் கிழக்கில் ஆட்சியை அமைத்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பிள்ளையான் கருணா குழு போன்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டவர்களுக்கும், அமிர்அலி போன்ற முஸ்லீம் வேட்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவற்றிற்கு வாக்களித்ததால்
மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு ஆசனங்களையும் அம்பாறையில் ஒரு ஆசனங்களையும் திருகோணமலையில் இரு ஆசனங்களையும் இழந்திருந்தது.

இந்த நான்கு ஆசனங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை அமைத்திருக்கும். இன்று இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.
பிள்ளையான்தான் முதலமைச்சர் என வாக்களித்த முனைக்காடு போன்ற கிராமங்களில் உள்ள முட்டாள்களால் இன்று தமிழினம் கிழக்கு மாகாணத்தில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று அமிர்அலிதான் முதலமைச்சர் என வாக்களித்த துறைநீலாவணை கிராமங்களை போன்றவர்களும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்