விடுதலைப் புலிகளின் தோல்வியை தமிழ் மக்களின் வீழ்ச்சி என்று கருதி விடக் கூடாது!

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

‘விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் வீழ்ச்சி என்று கருதிவிடக்கூடாது. ஒரு வரலாற்று அத்தியாயம் புதைக்கப்பட்ட முல்லைத்தீவில் நாங்கள் இன்று புதிய ஒரு அத்தியாயத்தை தொடங்கியிருக்கின்றோம்.

நாங்கள் எழுப்பிய கோசங்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு இது விளங்கியிருக்கும்’ என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கோப்பாப்பிளவு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில்,

‘அழிவுகளையும் அடக்கு முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தான் ராஜபக்ஷ அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு பெற்றுத்தந்த சுதந்திரம். போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகின்றது. இன்னமும் மக்கள் அவர்களின் சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படவில்லை.

தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்துவிட்டோம், நாட்டிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது இந்தியாவிற்கு சென்றுள்ளார். அங்கும் தான் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் பற்றியே பேசுவார். அனால் இங்கு நேரடியாக வந்து பார்க்கும் போதே அவர் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் லட்சனம் தெரிகிறது.

யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் பல பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு பலர் ஏதிலிகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மட்டுமன்றி திட்டமிட்ட வகையில் எங்கள் பகுதி கடல்வளங்கள் சூறையாடப்படுவதோடு எங்கள் நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன.

இது அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்குமுறையாகும். இந்த அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் தான் மஹிந்த அரசு வடகிழக்கு மக்களுக்கு பெற்றுத்தந்திருக்கின்றது.

இவற்றுக்கு எதிராக நாங்கள் அனைவரும் அனைத்துப் பிரதேசங்களிலும் ஜனநாயக வழியில் ஒன்று திரண்டால் மட்டுமே எங்கள் எதிரியை வீழ்த்த முடியும்’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்