விமானத்தில் கணவன் மனைவி, குழந்தைகள் என 5 பேர் காட்டு கத்தலோடு சண்டை:அவசரமாக தரையிறக்கி அவர்களை வெளியேற்றம்

அதிசய உலகம்

next........

மேலும்..

விமானத்தில் கணவன்  மனைவி, குழந்தைகள் என 5 பேர் காட்டு கத்தல் கத்தி சண்டை போட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை அவசரமாக தரையிறக்கி அவர்களை பைலட் வெளியேற்றினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் கிளவ்லேண்ட் பகுதியில் ஹர்டில்புல் நகரை சேர்ந்தவர் டேவிட் லாடன் (39). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயது டோரம் உள்பட 2 மகன்கள் உள்ளனர். தற்போது சாரா வில்சன் (28) என்பவருடன் இணைந்து வாழ்கிறார். இவர்களுக்கு பிறந்த ஒரு குழந்தை உள்ளது. ஐந்து பேரும் ஸ்பெயினில் உள்ள சுற்றுலா தீவான லான்சரோட்டுக்கு விமானத்தில் சென்றனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் முற்றியது. அப்போது, டேவிட்டுக்கு பிறந்த மகன்களும், இருவருக்கும் பிறந்த மகனும் சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சமாதானப்படுத்த விமான பணிப்பெண்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. தகவல் அறிந்த பைலட் உடனடியாக போர்ச்சுகல் ஏர்போர்ட்டில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். டேவிட் உள்பட 5 பேரையும் வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து வெளியேற்றினர். போலீசார் அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், அபராதம் எதுவும் விதிக்காமல் அவர்களை எச்சரித்து விடுவித்தனர். டேவிட்டின் மகன்களை ஏர்போர்ட்டிலேயே அனாதையாக விட்டுவிட்டு மற்றவர்கள் வேறு ஒரு விமானத்தில் தீவுக்கு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த டேவிட்டின் மாஜி மனைவி ஜனைன் பேர்ட் அதிர்ச்சி அடைந்தார். 2 மகன்களையும் லண்டனுக்கு அனுப்பி வைக்க, போர்ச்சுக்கல்லில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார்.

1 கருத்து

உங்கள் கருத்தை சொல்லுங்கள்