20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணியில் மாற்றம்: டோனி முடிவு

அதிசய உலகம்

next........

மேலும்..


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2007-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன்னில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 116 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறின.2 தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

இந்த பிரிவில் கடைசி ‘லீக்’ ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. இந்தப் போட்டியின் முடிவு எந்த பாதிப்பையையும் ஏற்படுத்தாது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்ய கேப்டன் டோனி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பலவீனமான ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. வீராட் கோலி, அணிக்கு மீண்டும் திரும்பிய யுவராஜ், ரெய்னா ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டனர். ஷேவாக், காம்பீர் ஆகியோரின் தொடக்கம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

இதேபோல முன்னணி பவுலரான ஜாகீர்கான் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் திணறுகிறார் என்றாலும் கேப்டன் டோனி அவர் மீது தொடர்ந்து நம்பிக்கையில் உள்ளார்.

‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்பு அணியை பலப்படுத்திக்கொள்ளும் வகையில் சில மாற்றம் செய்யப்படலாம். ஆனால் அணியில் இருந்து அவர் யாரை கழற்றி விடுவார் என்பதே கேள்வியாக உள்ளது.

முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணியை 59 ரன்னில் வென்று இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வென்றால் அந்த அணி ‘சூப்பர்8’ சுற்றுக்கு நுழையும். பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் ஆடுவதால் வெற்றியுடன் கணக்கை தொடங்க முயற்சிக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்