சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம்!

அதிசய உலகம்

next........

மேலும்..

சிரியா அதிபர் பஷார் அல்-அஸத்துக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் அரசு எதிர்ப்புப் படையின் தலைவர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குத் திரும்பி வந்தனர்.
முன்னதாக அவர்கள் துருக்கி உள்ளிட்ட பக்கத்து நாடுகளிலிருந்து செயல்பட்டனர்.

இதையடுத்து, அலெப்போ, தாரா உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தினர் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை நிகழ்ந்த தாக்குதலில் மட்டும் 220 பேர் கொல்லப்பட்டனர்.

அரசு எதிர்ப்புப் படை கமாண்டர் ரியாத் அல்-அஸத் கூறியது: “எங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு எங்கள் படைத் தலைவர்கள் வந்துள்ளனர். போர் தொடர்பான கட்டளைகளை அவர்கள் நேரடியாக அளித்து வருகின்றனர். சிரியாவின் தலைநகர் டமாஸ்காஸ ராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்க கடும் தாக்குதலை தொடங்கியுள்ளோம்” என்றார்.

இதற்கிடையே வாடிகனுக்குச் சென்ற சிரியா அரசு எதிர்ப்புக் குழு ஒன்றைச் சேர்ந்த தலைவர் ஜார்ஜ் சாப்ரா, அங்கு போப் 16-வது பெனடிக்ட்டை சந்தித்துப் பேசினார்.

சிரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அதிபர் பஷார் அல்-அஸத் செயல்படுவதாக அவர் புகார் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, மற்றொரு அரசு எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த அப்துல் பஸ்ஸத் சய்தா என்பவரும் உடனிருந்தார்.

எகிப்து அதிபர் உரை:÷எகிப்து அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற முகமது முர்ஸி, தொலைக்காட்சியில் முதல் முறையாக உரையாற்றினார். அவர் கூறியது:÷””சிரியாவில் இப்போது நடைபெற்று வரும் மோதல், சட்டத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரானது என்பதை அந்நாட்டு அரசு உணர வேண்டும். அங்கு ஏற்படும் பாதிப்பு, இப்பிராந்தியம் முழுவதும் எதிரொலிக்கும். எனவே, சிரியா பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பது அவசியம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்