பிளஸ்1 புத்தகத்தில் அம்பேத்கரை இழிவுப்படுத்தி கேலிசித்திரம்

அதிசய உலகம்

next........

மேலும்..

மத்தியக்குழு பாடத்திட்டத்தில் ‘பிளஸ்1’ புத்தகத்தில் அம்பேத்கரை இழிவுப்படுத்தி கேலிசித்திரம் வெளியிட்டு இருப்பதற்கு தமமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’மத்திய அரசின் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு வடிவமைத்துள்ள மத்தியக்குழு பாடத்திட்ட பிளஸ்1 புத்தகத்தில் அம்பேத்கரை பற்றி கேலிசித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் அமைப்பு சட்டங்களை கற்றறிந்து அதன் சிறப்பு அம்சங்களை உள்வாங்கி, எந்நிலையிலும் சாகாத வகையில் அம்பேத்கரின் பெரும் உழைப்பால் உருவாக்கப்பட்டது.

ஆனால் மத்தியக்குழு பாடத்திட்டத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அவர் நத்தை மீது அமர்ந்து செல்வது போலவும், அவருக்கு பின்புறமாக நேரு நின்று கொண்டு அவரை சாட்டையால் அடித்து வேகப்படுத்துவது போலவும் கேலிசித்திரம் வெளியிடப் பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக் கத்தக்கது.

எனவே இச்செயலுக்கு மத்தியில் ஆளுகிற காங்கிரஸ் அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும். பிளஸ்1 பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் என்ற பாடத்தின் 18ம் பக்கத்தில் இருக்கும் கேலிசித்திரத்தை நீக்கவேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தமமுக மாநிலம் முழுவதும் அறப்போராட்டங்களை நடத்தும்’’ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்