செய்திகள்

  2017 ற்கான சிறந்த  சமூக ஆர்வாளர்களுக்கான சமாதான தூதுவர் விருது.

2017 ஆம் ஆண்டிக்கான சமாதான தூதுவருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இலங்கையின் சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், பல உள்நாட்டு வெளிநாட்டைச்சேர்ந்த 18 சமூக ஆர்வாலர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகள் (Ambassador Award) வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதில் சமாதானம், மனித ...

மேலும்..

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தேட்ட வட்டாரத்தின் வெற்றி வேட்பாளரை ஆதரித்த கூட்டம்.

பைஷல் இஸ்மாயில் - அம்பாறை மாவட்ட, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தோட்டம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி. தீனுல்லாவை ஆதரித்து நேற்றிரவு (22) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் குறித்த கட்சியில் ...

மேலும்..

காணிகளை விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக ...

மேலும்..

கிளிநொச்சியிலிருந்து, வவுனியாவிற்கு போதைப்பொருள் கடத்த முயற்சித்த நபர் கைது

கிளிநொச்சியிலிருந்து, வவுனியாவிற்கு கேரள கஞ்சா போதைப்பொருளினை எடுத்துச்செல்ல முயற்சித்த நபரொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியைச் ...

மேலும்..

ஜனாதிபதி, பிரதமர், புதிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்ற பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும். இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார ...

மேலும்..

போக்குவரத்தில் துன்பங்களை அனுபவித்து வரும் மக்கள்

  புத்துவெட்டுவான் வீதி சட்டவிரோத செயற்பாடுகளால் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், புத்துவெட்டுவான், மருதன்குளம், பழையமுறிகண்டி, ஐயங்கன்குளம், தேறாங்கண்டல் உள்ளிட்ட மிகவும் பழமை வாய்ந்த விவசாயக் கிராமங்களை இணைக்கும் பிரதான வீதியாகவும் கானப்படுகின்றது. அத்துடன், ஏ-9 வீதியின் கொக்காவில் சந்தியிலிருந்து மாங்குளம், வெள்ளாங்குளம் ...

மேலும்..

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ம்மை வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய முறைமை தவறு எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார். தம்மை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும்படியும், ...

மேலும்..

சுவிஸ்குமார் தொடர்பில் மனைவி மகாலட்சுமி வெளியிட்ட தகவல்

கடந்த 2015.05.08ஆம் திகதியிலிருந்து 2015.05.12ஆம் திகதி வரை எனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் என வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி மன்றில் சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் ...

மேலும்..

கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு கோரிக்கை

கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் அருமைநாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றின் ஊடாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட இணைப்புக் கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் இது தொடர்பில் யோசனை ...

மேலும்..

இறந்து போன மகளுடன் தவித்த சிங்கள தாய்க்கு, உதவிய தமிழ் இளைஞர்கள்!!

உயிரிழந்த ஒரே மகளின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்த சிங்கள தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் உதவிய சம்பவம் ஒன்று நுவரெலியா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நுவரெலியா வைத்தியசாலையில் தனது மகளின் சடலத்தை வைத்து கொண்டு “யாராவது முடிந்தால் இந்த சடலத்தை அரசாங்க ...

மேலும்..

பெரஹெர ஊர்வலத்தில் சென்ற பெண்களின் ஆடையால் சர்ச்சை

மாத்தறை - சீனிகம விகாரையில் நடைபெற்ற பெரஹெர ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஐந்து பெண்கள் அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. சீனிகம விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் குறித்த பெண்கள் அணிந்திருந்த ஆடை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து வேறுபாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறித்த ...

மேலும்..

குடிநீர் விநியோகத்துக்கு 4 தண்ணீர் பவுசர்களை வழங்கியது யுனிசெப்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 4 தண்ணீர் பவுசர்களை யுனிசெப் UNICEF அமைப்பு வழங்கியுள்ளது. குறித்த தண்ணீர் பவுசர்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இந்த ...

மேலும்..

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தென்மாகாண சபையில் இன்று 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மாகாண சபையின் தவிசாளர் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை நடத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சபையிலிருந்து ...

மேலும்..

மாளிகாவத்தையில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த ...

மேலும்..

தற்காலிக காணியை நிரந்தரமாக வலயக் கல்விப்பணிமனைக்கு வழங்க தீர்மானம்

கிளிநொச்சி கல்வி வலயம் தற்காலிகமாக இயங்கி வரும் காணியை நிரந்தரமாக வலயக் கல்விப்பணிமனைக்கு வழங்குவது என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தற்போது ...

மேலும்..