விளையாட்டு

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமனம்

இலங்கை அணியின் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளர் சம்பக்க ராமநாயக்கவுக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் இலங்கையிலுள்ள இளம் பந்து வீச்சாளர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கவனம் செலுத்தியிருந்தார். ...

மேலும்..

இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்தவாஸ் நியமனம்

இந்திய அணிக்கெதிரான தொடருக்காக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த சம்பக ராமநாயக்க தனது பதவியிலிருந்து விலகியதையடுத்தே சமிந்தவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ...

மேலும்..

மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் வெற்றியீட்டியுள்ளது

(வெல்லாவெளி நிருபர் - க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாண தடைக்கல சுவட்டு விளையாட்டுப் போட்டியில் பட்டிருப்பு வலய மாணவர்கள் பங்குபற்றி 203 புள்ளிகளைப் பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை தட்டிக்கொண்டார்கள். பட்டிருப்பு கல்வி வலய மாணவர்கள் மாகாண விளையாட்டுப்போட்டியை உத்வேகத்துடனும்,சவாலாகவும் ...

மேலும்..

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் 04ஆவது ஆண்டாக நடாத்தப்பட்டு வரும் மாவட்டம் தழுவிய கூடைப்பந்தாட்டப்போட்டி

யாழ்.மாவட்டத்தில் இளைஞர்களிடையே கூடைப்பந்தாட்டத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் 04ஆவது ஆண்டாக நடாத்தப்பட்டு வரும் மாவட்டம் தழுவிய கூடைப்பந்தாட்டப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று 19.07.2017 புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ்.மத்தியகல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை ...

மேலும்..

ஐ.சி.சி டெஸ்ட் தர வரிசையில் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத்.

ஐ.சி.சி இன் புதிய டெஸ்ட் தர வரிசைப்படி இரண்டாம் இடத்திலிருந்த இந்திய வலதுகை சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினைப் பின்தள்ளி 32 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்திலிருக்கும் மற்றுமொரு இந்திய சுழல் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்துக்கு ரங்கன ஹேரத் ...

மேலும்..

‘புதிய பயிற்சியாளருடனான பயணம் சுமுகமாக இருக்கும்’ கேப்டன் விராட்கோலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடனான பயணம் சுமுகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். இலங்கை பயணம் இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி ...

மேலும்..

2011 உலகக் கிண்ண தோல்வி : அர்ஜுனவை அடுத்து மஹிந்தானந்தவுக்கும் சந்தேகம்.

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தோல்வி குறித்து சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடந்த சில தினங்களுக்கு முன் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ...

மேலும்..

ஷமிந்த எரங்க மீதான பந்துவீச்சுத் தடை நீக்கம்.

விதிமுறைகளுக்கு புறம்பான பந்துவீச்சுப்பாணியை கொண்டிருந்த காரணத்தினால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமிந்த எரங்க மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (18) முதல் நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஷமிந்த எரங்க சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சுப்பாணியை கொண்டிருப்பதாக கடந்த வருடம் மே மாதத்தில் ...

மேலும்..

ஜிம்பாப்வேயின் சாதனைக் கனவை தகர்த்த இலங்கை புதிய சாதனை. – 4 விக்கெட்டுகளால் வெற்றி.

ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாளான இன்று களமிறங்கிய இலங்கை அணி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அசேல குணரத்னவின் அபார துடுப்பாட்டத்தினால் கடும் போராட்டத்துக்குப் பின்னர் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. பல்லேகல சர்வதேச கிரிக்கெட் ...

மேலும்..

இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்திய தென்னாபிரிக்கா தொடரை சமப்படுத்தியது

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 340 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது. நொட்டிங்ஹாம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சவாலான 474 என்ற ஓட்ட ...

மேலும்..

தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் அஸ்ராஸ் தெரிவு

(ஹஸ்பர் ஏ ஹலீம்) 19, வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய 32 வீரர்கள் கொண்ட குழாமை இலங்கை சம்மேளனம் வெளியிட்டுள்ளது.          இதில்- கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனான மொஹமட் அஸ்ராஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.கிண்ணியா பழைய மாணவர்கள் சங்கம்,ஆசிரியர்கள் அதிபர் அனைவருடைய வாழ்த்துக்களையும் ...

மேலும்..

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 474 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு 474 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, முதல் இன்னிங்ஸிற்காக 335 ஓட்டங்களை குவித்தது. இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை ...

மேலும்..

விம்பிள்டன் பட்டத்தை வென்று `சாதனை நாயகன்’ ஆனார் ரோஜர் பெடரர்

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து களமிறங்கிய மரின் சிலிக்கை 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று ரோஜர் பெடரர் விம்பிள்டன் ...

மேலும்..

“இந்த தங்கம் கிடைக்காவிடில் பைத்தியம் ஆகி இருப்பேன்”பாரா – அத்லெடிக் சாம்பியன் சுந்தர் உருக்கம்

லண்டனில் நடந்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா - அத்லெடிக் சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார் 21 வயது இந்திய வீரர் சுந்தர் கர்ஜார் . 60.36 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த சுந்தர், ஐ.பி.சி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் ...

மேலும்..

ஆறுதல் வெற்றியுடன் மகளிர் உலக கிண்ணத்திலிருந்து விடைபெறும் இலங்கை

மகளிர் உலக கிண்ணத்திற்கான குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன. இத்தொடரின், இறுதி குழு நிலைப் போட்டியில் மோதிய இலங்கை மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை சுவீகரித்துள்ளது. லெய்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் எந்தவொரு ...

மேலும்..